Foreign Minister Prof. Peiris briefed the Indian Foreign Minister on the situation with regard to the Covid-19 pandemic and the successful measures being implemented by the Government of Sri Lanka to control the spread of the virus.
Minister Peiris further briefed the Foreign Minister about the pragmatic and tangible action taken by the government to resolve residual matters after the end of the conflict in May 2009, citing the fact that the Foreign Ministry, Defence Ministry and Justice Ministry were working collaboratively to address key issues, such as revisiting the Prevention of Terrorism Act, releasing of LTTE prisoners, and empowering independent institutions such as the Office of Missing Persons, Office for Reparations, Office of National Unity and Reconciliation, the Human Rights Commission of Sri Lanka and the SDG Council. Minister Peiris indicated that substantial progress had been made on many fronts and that efforts were continuing.
Foreign Minister Peiris further indicated that there is strong political will to move forward in many different areas of bilateral relations between India and Sri Lanka.
The Foreign Minister emphasised that Sri Lanka cannot accept any external mechanisms active on the ground, when robust domestic mechanisms are vigorously moving forward, stating that the nation was greatly encouraged by many countries standing firmly with the principled position taken by Sri Lanka that resolutions against countries cannot work without the consent of those countries. Both ministers agreed that bilateral relations between the two countries are of critical importance.
Minister Jaishankar indicated the need for a fair and just resolution of residual issues in the aftermath of the ethnic issues is in the interest of both countries. The Indian Foreign Minister indicated that our relations should not be limited to a single issue. He further emphasised the need for a practical conclusion of the number of projects pending implementation, indicating that it would give more confidence to New Delhi to move forward in enhancing relations. Minister Jaishankar confirmed that India is willing to work with Sri Lanka in many different ways, including enhancing people to people contacts. The Minister also highlighted the need to engage with all stakeholders, including different political parties.
Both ministers agreed on the need to conclude pending agreements to fast-track relations between the two countries.
Foreign Ministry
Colombo
23 September, 2021
…………………………………………….
මාධ්ය නිවේදනය
2021 සැප්තැම්බර් 22 වැනි දින ඇමරිකා එක්සත් ජනපදයේ නිව්යෝර්ක් හිදී පැවති එක්සත් ජාතීන්ගේ මහා මණ්ඩල සැසිවාරය අතරතුර දී විදේශ අමාත්ය මහාචාර්ය ජී.එල්. පීරිස් මැතිතුමා ඉන්දීය විදේශ අමාත්ය ආචාර්ය එස්. ජයිශංකර් මැතිතුමා හමුවිය
මහාචාර්ය පීරිස් මැතිතුමා කොවිඩ්-19 වසංගතය සම්බන්ධයෙන් පවතින තත්ත්වය සහ වෛරස ව්යාප්තිය පාලනය කිරීම සඳහා ශ්රී ලංකා රජය විසින් ක්රියාත්මක කරන සාර්ථක පියවර පිළිබඳව ඉන්දීය විදේශ අමාත්යවරයා දැනුවත් කළේය.
ත්රස්තවාදය වැළැක්වීමේ පනත නැවත සලකා බැලීම, එල්ටීටීඊ සිරකරුවන් නිදහස් කිරීම සහ අතුරුදන් වූවන්ගේ කාර්යාලය, වන්දි ගෙවීමේ කාර්යාලය, ජාතික සමගිය හා ප්රතිසන්ධානය පිළිබඳ කාර්යාලය, ශ්රී ලංකාවේ මානව හිමිකම් කොමිසම සහ තිරසාර සංවර්ධන ඉලක්ක පිළිබඳ කවුන්සිලය වැනි ස්වාධීන ආයතන බල ගැන්වීම වැනි ප්රධාන කරුණු විසඳීම සඳහා විදේශ අමාත්යාංශය, ආරක්ෂක අමාත්යාංශය සහ අධිකරණ අමාත්යාංශය සහයෝගයෙන් කටයුතු කරන බව උපුටා දක්වමින්, 2009 මැයි මාසයේ දී ගැටුම අවසන් වීමෙන් පසු ඉතිරි වී ඇති ගැටලු විසඳීම සඳහා රජය ගත් ප්රායෝගික හා ස්පෘෂ්ය ක්රියාමාර්ගය පිළිබඳව අමාත්ය පීරිස් මැතිතුමා තවදුරටත් විදේශ අමාත්යවරයාට පැහැදිලි කළේය. අමාත්ය පීරිස් මැතිතුමා පෙන්වා දුන්නේ බොහෝ අංශවලින් සැලකිය යුතු ප්රගතියක් ලබා ඇති බවත් එම ප්රයත්න අඛණ්ඩව සිදු වෙමින් පවතින බවත් ය.
ඉන්දියාව සහ ශ්රී ලංකාව අතර ද්විපාර්ශ්වික සබඳතාවල විවිධ ක්ෂේත්රයන් සම්බන්ධයෙන් ඉදිරියට යාම සඳහා දැඩි දේශපාලන කැමැත්තක් ඇති බව විදේශ අමාත්ය පීරිස් මැතිතුමා වැඩිදුරටත් පැවසීය.
ශක්තිමත් දේශීය යාන්ත්රණයන් ක්රියාශීලීව ඉදිරියට ගමන් කරන විට, කිසිදු බාහිර යාන්ත්රණයක් භූමිය තුළ ක්රියාත්මක වීම ශ්රී ලංකාවට පිළිගත නොහැකි බව අවධාරණය කළ විදේශ අමාත්යවරයා, ඒ රටවල අනුමැතියකින් තොරව රටවල්වලට විරුද්ධව යෝජනා ගෙන ඒම ක්රියාත්මක කළ නොහැකි බවට ශ්රී ලංකාව ගත් ප්රතිපත්තිමය ස්ථාවරය සමඟ බොහෝ රටවල් ස්ථාවරව සිටීම තුළින් ශ්රී ලංකාව බෙහෙවින් දිරිමත් වූ බව සඳහන් කළේය. දෙරට අතර පවතින ද්විපාර්ශ්වික සබඳතා ඉතා වැදගත් බවට අමාත්යවරු දෙදෙනාම එකඟ වූහ.
ජනවාර්ගික ගැටලුවලින් පසු ඇති වන අවශේෂ ගැටලු පිළිබඳ සාධාරණ හා යුක්ති සහගත විසඳුමක් සඳහා වූ අවශ්යතාවය, දෙරටේම යහපත සඳහා බව අමාත්ය ජයිශංකර් මැතිතුමා පැවසීය. අපගේ සබඳතා එක් ගැටලුවක් සඳහා පමණක් සීමා නොවිය යුතු බව ඉන්දීය විදේශ අමාත්යවරයා සඳහන් කළේය. සබඳතා වැඩිදියුණු කිරීමේ දී නවදිල්ලියට වැඩි විශ්වාසයක් ලබා දිය හැකි වන පරිදි, ක්රියාත්මක කිරීමට නියමිතව ඇති ව්යාපෘති සංඛ්යාව ප්රායෝගිකව අවසන් කිරීමේ අවශ්යතාවය ඔහු තවදුරටත් අවධාරණය කළේය. පුද්ගලාන්තර සම්බන්ධතා වැඩි දියුණු කිරීම ඇතුළුව ශ්රී ලංකාව සමඟ විවිධ ආකාරයෙන් කටයුතු කිරීමට ඉන්දියාව කැමති බව අමාත්ය ජයිශංකර් මැතිතුමා තහවුරු කළේය. විවිධ දේශපාලන පක්ෂ ඇතුළු සියළුම පාර්ශ්වකරුවන් සමඟ සම්බන්ධ වීමේ අවශ්යතාවය ද අමාත්යවරයා අවධාරණය කළේය.
දෙරට අතර සබඳතා කඩිනම් කිරීම සඳහා අපේක්ෂිත ගිවිසුම්වලට එළඹීමේ අවශ්යතාව පිළිබඳව අමාත්යවරුන් දෙදෙනාම එකඟ වූහ.
විදේශ අමාත්යාංශය
කොළඹ
2021 සැප්තැම්බර් 23 වැනි දින
……………………………………
ஊடக வெளியீடு
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் பக்க அம்சமாக, இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 செப்டம்பர் 22ஆந் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருடன் சந்திப்பு
கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தும் வெற்றிகரமான நடவடிக்கைகள் தொடர்பான நிலைமை குறித்து பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்தல், கைதிகளாகவுள்ள விடுதலைப் புலிகளை விடுதலை செய்தல் மற்றும் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை போன்ற சுயாதீன நிறுவனங்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற முக்கிய பிரச்சனைகள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நீதி அமைச்சு ஆகியன ஒத்துழைப்புடன் செயற்படுவதனை சுட்டிக்காட்டி, 2009 மே மாதத்தில் மோதல் முடிவுக்கு வந்ததன் பின்னர், எஞ்சிய விடயங்களைத் தீர்ப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடைமுறைகள் மற்றும் உறுதியான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார். பல முனைகளில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் முயற்சிகள் தொடர்வதாகவும் அமைச்சர் பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் பல்வேறு பகுதிகளில் முன்னேறுதற்காக வலுவான அரசியல் விருப்பம் இருப்பதாக வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடுகளுக்கு எதிரான தீர்மானங்கள் அந்த நாடுகளின் அனுமதியின்றி செயற்படுத்தப்பட முடியாது என்ற அடிப்படையில் இலங்கை எடுத்த கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, பல நாடுகளை பெரிதும் ஊக்குவித்தன என்பதை சுட்டிக்காட்டி, வலுவான உள்நாட்டுப் பொறிமுறைகளினூடாக முன்னோக்கிச் செல்லும் போது, வேறு எந்த வெளிப்புறப் பொறிமுறைகளையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிநாட்டு அமைச்சர் வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மிக முக்கியமானவை என்பதை இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டனர்.
இரு நாடுகளினதும் நலன் கருதி, இனப்பிரச்சினைகளுக்குப் பின்னர் எஞ்சியிருக்கும் பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் நீதியான தீர்வுகள் அவசியம் என அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். எமது உறவுகள் ஒரு பிரச்சினைக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக்கூடாது என இந்திய வெளியுறவு அமைச்சர் குறிப்பிட்டார். செயற்படுத்தப்பட வேண்டிய திட்டங்களின் நடைமுறை ரீதியான நிறைவானது உறவுகளை மேம்படுத்துவதில் புதுடெல்லிக்கு அதிக நம்பிக்கையை அளிக்கும் என்பதனை சுட்டிக்காட்டி, அதனை நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் வலியுறுத்தினார். மக்களுக்கிடையிலான தொடர்புகளை அதிகரித்தல் உட்பட பல்வேறு வழிகளில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் ஈடுபட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை விரைவுபடுத்தும் முகமாக, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 செப்டம்பர் 23
Leave A Comment