இலங்கை அரசாங்கத்தின் புதிய சட்ட விதிமுறைகளுக்கிணங்க 2018 சனவரி 01ம் திகதி தொடக்கம் ரோம் தூதரகத்தின் வழியே அல்லது மிலான் கொன்சுயுலேட் வழியே கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளும் 16 வயது தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட சகலரும் இலங்கை செல்லும் முதற் சந்தர்ப்பத்தின் போதே கொழும்பு, பத்தரமுல்லயில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கண்டி, மாத்தறை, வவுனியா மற்றும் குருநாகல் பிரதேச அலுவலகங்களுக்கு சென்று தங்களது உயிர்மான தரவுகளை
(கைவிரல் அடையாளத்தை) பதிவு செய்தல் கட்டாய தேவைப்பபாடாகும்.
உயிர்மான தரவுகளை பதிவு செய்ய தவறும் எந்தவொரு நபரும் இலங்கையிலிருந்து வெளியேற இயலாது.
ஆகவே 2018 சனவரி 01ம் திகதி தொடக்கம் ரோம் தூதரகத்தின் வழியே அல்லது மிலான் கொன்சுயுலேட் அலுவலகத்தின் வழியே கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கும் சகலரும் கைவிரல் அடையாளத்தை பதிவுசெய்ய ஏற்றவாறு தங்களது பயண ஒழுங்குகளை மேறகொள்ளவும்
புதிய நடைமுறைக்கமைய கடவுச் சீட்டுக்கு விண்ணப்பிக்கு விண்ணப்பித்தல்
படிவம் K -35 A ல் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்
- மூல விண்ணப்படிவம் நிகராக பூர்த்திசெய்யப்பட்டு இங்கு கீழ் சொல்லப்படும் சகல ஆவணங்களின் பிரதிகளும் இணைக்கப்படவேண்டும். பூர்த்திசெய்யப்பட்ட மூல விண்ணப்பபடிவமானது ஆவணங்கள் சகிதம் மேலதிக பிரதயொன்று எடுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக (Two Sets) சமர்ப்பிப்பட வேண்டும்
- ஆவணங்கள் யாவும் A4 அளவுகொண்ட கடதாசி தாளில் மட்டுமே பிரதி செய்யப்பட்டு சமாப்பிக்கப்படல் வேண்டும்.
- மூல ஆவணங்கள் யாவும் (Original Documents) தனியாக சமாப்பிக்கப்படல் வேண்டும்(மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பிரதி மூலப் பிரதி ஏற்கப்படமாட்டாத)
- விண்ணத்தில் இத்தாலி நாட்டு விலாசம் எழுதப்பட வேண்டும், கையொப்பமிடும் கூட்டின் விளிம்பில் படாதவாறு கையொப்பமிட வேண்டும்.
- முன்பு உபயோகித்த கடவுச் சீட்டின் கையொப்பம் தற்போது வித்தியாசப்படுமாயின் அதனை சத்திய பிரகடணத்தின் வழியே உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- கடவுச் சீட்டில் தொழில் உட்படுத்தப்படவேண்டுமாயின், கல்வித்தகைமை அல்லது தொழில் நிலபர (உறுதிப்படுத்தப்பட்ட) மூலச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
- 4.5 செ. மீ உயரமும் 3.5 செ. மீ அகலமும் கொண்ட மிக தெளிவான 04 புகைப்பட பிரதிகள் சமர்ப்பிக்கப்படல்
வேண்டும். புகைப்படமானது கடைசி 03 மாதங்களுக்குள் பெறப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன் காதுகள் தெளிவாக தெரிகின்ற, இருளற்ற , நேர் பார்வை உடைய நிழல்களற்ற, மூக்கு கண்ணாடி அணியாத, தொகுப்பு செய்யப்படாத, மற்றும் புகைப்படத்தின் பின்னமைந்த வர்ணம் அணிந்திருக்கும் உடையின் வர்ணத்திலும் வேறுபட்டிருத்தல் வேண்டும்.
- பிறப்பு சான்றிதழ் மூலப்பிரதி
- வெளிநாட்டில் பிறந்தவராயின் இலங்கை பிரஜாவுரிமை சான்றிதழ் அல்லது அதற்கு பணம் செலுத்திய பற்றுச்சீட்டு பிரதி
- விவாகத்தின் பின் பெயர் மாற்றம் பெற்றிருப்பின் அதனை உறுதிப்படுத்துவதற்கான விவாக சாட்சி பத்திரம்.
தற்போதைய கடவுச்சீட்டு
இத்தாலியில் தங்கியிருப்பதற்கான SOGGIORNO அனுமதிபத்திரம்
- தங்களது தற்போதைய கடவுச்சீட்டில் இலங்கை தேசிய அடையாள அட்டை இலக்கம் உட்படுத்தப்பட- வில்லையாயின், தே.அ.அட்டையின் பிரதி அல்லது தே.அ.அ இல்லையென்பதற்கான உறுதியரை.
புதிய கடவுச்சீட்டினை தபால் மூலம் பெற விரும்பின், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்திசெய்து சமர்ப்பித்தல் வேண்டும்.