சாரதி அனுமதி பத்திரம் தொடர்பான

2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் திகதி கைச்சாத்திடப்பட்ட இலங்கை-இத்தாலி புதிய இருதரப்பு ஒப்பந்ததின் பிரகாரம், இலங்கை சாரதி அனுமதி பத்திரம் இத்தாலி நாட்டு சாரதி அனுமதி பத்திரத்துக்கு மாற்றம் செய்யும் செயல்முறையை மீண்டும் அமுல்படுத்த இரு நாடுகளும் உடன்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் 2017 மார்ச் 07ம் திகதி தொடக்கம் ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகத்திலும் மற்றும் இத்தாலி நாட்டின் Lombardy, Friuli Venezia Giulia, Liguria, Piedmont, Trentino Alto Adige, Valle d’Aosta , Veneto ஆகிய பிராந்தியங்களில் வசிக்கும் இலங்கை மக்கள் மிலான் நகரில் உள்ள இலங்கை கொன்சுலேட் ஜெனரல் அலுவலகத்திலும் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தை மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளலாம்

 • சாரதி அனுமதி பத்திரம் மாற்றீடு (பரிவர்த்தனை) தொடர்பில் இதற்கு முன்பு செயற்பாட்டிலிருந்த சட்ட திட்ட மற்றும் நடைமுறைகளில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பதால், இங்கு கீழ் சொல்லப்படும் அத்தியாவசிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரி தமது சாரதி அனுமதி பத்திரத்தை பரிவர்த்தனை செய்வதற்;கான விண்ணப்பத்தை தனிப்பட்ட முறையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

  ​நிகரான முறையில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபடிவமஇலங்கையில் வழங்கப்பட்ட செல்லுபடியான சாரதி அனுமதி பத்திரம் மற்றும் அதன் இரு பக்கங்களினதும் (முன,பின்) தகவல்கள் தெளிவாக தெரிகின்ற வகையில் இருமடங்கு பெரிதாக்கப்பட்ட அதன் நிழற்பட பிரதிகள் இரண்டு. (சாரதி அனுமதி பத்திரத்தின் முன் மறறும் பின் பக்கம் ஒரே பக்கத்தில் தெரிகின்றவாறு நிழற்பட பிரதி எடுக்கப்பட வேண்டும்)

  1. செல்லுபடியான இலங்கை கடவுச்சீட்டு மற்றும் அதன் “தகவல் பக்கம் (பக்கம் 02-03) உட்பட கடவுச் சீட்டில் மாற்றங்கள் செய்யப்படும் பக்கம் (பக்கம் 04-05) என்பவற்றின் நிழற்பட பிரதி.(இலங்கை சாரதி அனுமதி பத்திரத்தில் உள்ள பெயர் மற்றும் கடவுச் சீட்டில் உள்ள பெயர் என்பவற்றுக்கிடையே வித்தியாசம் காணப்படின்; அல்லது சாரதி அனுமதி பத்திரம் பழுதடைந்தோ அல்லது சிதைவடைந்தோ காணப்படுமாயின் தங்களது விண்ணப்ப படிவம் நிராகரிக்கப்படலாம்)
  2. விண்ணப்பதாரியின் இத்தாலி நாட்டு நிரந்தர வதிவிட நிலையை உறுதிப்படுத்துவதற்கான அறிக்கை.(Certificato di Residenza STORICO” con la data dell’immigrazione dallo Sri Lanka). தாங்கள் இலங்கையிலிருந்து இத்தாலி நாட்டுக்கு வதிவுக்காக வருகை தந்து எவ்வளவு காலம் நிறைவடைந்துள்ளது என்பது இதனில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவ்வறிக்கை Comune வில் பெற்றுக்கொள்ளலாம்.
  3. விண்ணப்பதாரியின் இலங்கை சாரதி அனுமதி பத்திரமானது இத்தாலி நாட்டில் நிரந்தர வதிவு அனுமதியினை பெறுவதற்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதி பத்திரமாக இருத்தல் வேண்டுமென்பது கட்டாய தேவைப்பாடாகும்.
  4. மேலும் விண்ணப்பதாரி; இத்தாலியில் வதிவு பெற்று நான்கு (04) வருடங்கள் மேற்படுவதற்கு முன் இத்தாலி சாரதி அனுமதிபத்திர பரிவர்த்தனைக்கு விண்ணப்பித்தல் வேண்டும். இத் தேவையினை பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  5. இத்தாலியில் தங்கியிருப்பதற்கான (SOGGIORNO) அனுமதி பத்திரம். (காலாவதியான SOGGIORNO அனுமதி பத்திரம் அல்லது அதனை நீடிப்பதற்கு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் சாரதி அனுமதி பத்திரம் மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.)
  6. இத்தாலி அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வதிவிட அடையாள அட்டை CARTA D” IDENTITA) மற்றும் அதன் நிழற்பட பிரதி.
 • முறைமை

  பிழையின்றி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்டும் பட்சத்தில் பரிவர்த்தனை செயன்முறைக்காக தூதரகத்தில்/மிலான் கொன்சுயுலேட் ஜெனரல் அலுவலகத்தில் அதற்கான கட்டணமாகிய யுரோ 42 தொகையை செலுத்தி, பணம் செலுத்தியதற்கான மஞ்சள் நிற ரசீதினை பெற்றுக்கொள்ள வேண்டும். இம் மஞ்சள் நிற ரசீதின்; மேற் பகுதியில் தங்களது சாரதி அனுமதி பத்திரத்தின் இலக்கம் (Reference Number) குறிப்பிடப் பட்டிருக்கின்றதா என்பதை அலுவலகத்திலிருந்து வெளியே செல்ல முன் தயவு கூர்ந்து அவதானிக்கவும். இம் மஞ்சள் நிற ரசீது மாற்றீடு (பரிவர்த்தனை) செய்யப்பட்ட சாரதி அனுமதி பத்திரத்தை பெறுவதற்கு இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்தில் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதால் (Italian Motorizzazione); அதனை பாதுகாப்பாக வைத்துக்கொளவது விண்ணப்பதாரியின் பொறுப்பாகும். தவறவிடப்பட்ட ரசீதுக்கு பதிலாக புதிய ரசீது அல்லது அது தொடர்பாக எவ்வித கடிதமோ வழங்கப்படமாட்டாது.

  விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்களின் பின்னர் தங்களின் மஞ்;சள் நிற ரசீது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட இத்தாலி நாட்டின் மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்திடம் கையளிக்கவும். Italian Motorizzazione); இம்மஞ்சள் நிற ரசீது கையளிக்கப்பட முன்பதாக அதனின் நிழற்பட பிரதியை விண்ணப்பதாரி பிற் தேவைகளுக்கு தன்னிடம் வைத்துக்கொள்வது முக்கியமானதாகும்.

  விண்ணப்பதாரியின் மஞ்;சள் நிற ரசீது இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்துக்கு (Italian Motorizzazione); கையளிக்கப்பட்ட பின் அது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்படுவதுடன், விண்ணப்பதாரி தெரிவித்துள்ள தகவல்களின் உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொண்டதன் பின் தங்களது சாரதி அனுமதி பத்திரத்தை மாற்றீடு (பரிவர்த்தனை) செய்வதற்கான பரிந்துரைகள் தூதரகத்தினால் நேரடியாக இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து (Italian Motorizzazione);; தாபனத்துக்கு அளிக்கப்படும்.

  இதற்கமைய இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனத்தினால் (Italian Motorizzazione) தங்களது இத்தாலி சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்படும். இங்கு தங்களது இலங்கை சாரதி அனுமதி பத்திரமானது அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்பதுடன்; அவர்களால் பின்னர் அது செல்லுபடியற்றதாக்க நடவடிக்கை எடுக்கப்படும். (மீண்டும் இலங்கை சாரதி அனுமதி பத்திரம் தேவைபடுமிடத்து இத்தாலி சாரதி அனுமதி பத்திரத்தை ஒப்படைத்தல் வேண்டும்)

  பொய்யான தகவல்களின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்படும் விண்ணபங்கள் உடன் நிராகரிக்கப்படுவதுடன் அவ்வாறான சந்தர்ப்பங்களில் விண்ணப்பதாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிவிக்கப்படுகின்றது.

  இவ் சாரதி அனுமதி பத்திர பரிவாத்தனை செயன்முறைக்கு ரோம் நகரில் உள்ள இலங்கை தூதரகம்/ மிலான் நகரில் உள்ள இலங்கை கொன்சுலேட் ஜெனரல் அலுவலகம் மற்றும் இத்தாலி மோட்டார் வாகன போக்குவரத்து தாபனம் (Italian Motorizzazione) தவிர்ந்த எவரேனையும் தொடர்புபடுத்தப்படுவதால் ஏற்படும் தவறான செயல்களுக்கு தூதரகம் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Application Forms

DLC விண்ணப்படிவம்,ரோம்
DLC விண்ணப்படிவம்,மிலான்