இலங்கைக்கு வெளியே நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல் மற்றும் குடியுரிமை சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தல்
இங்கு கீழ் சொல்லப்பட்ட சகல ஆவணங்களும் ஒழுங்கு முறையே இரு பிரதிகள் செய்யப்பட்டு வெவ்வேறு இரு கோவைகள் மூலம் சமர்பிக்கப்படல் வேண்டும் அத்துடன் மூலப்பிரதிகள் (Originals) யாவும் தனியாக சமர்பிக்கப்படல் வேண்டும்.
குழந்தை பிறந்து ஒரு வருடத்தின் பின் விண்ணப்பிக்கப்படும் பிறப்பு பதிவுகள் தொடர்பில் கொழும்பு பதிவாளர் நாயகத்தின் அங்கீகாரம் கிடைத்த பின்பே பதிவு மேற்கொள்ளப்படும், இவ்வாறான சந்தர்பத்தில் சகல ஆவணங்களும் ஒழுங்கு முறையே மூன்று பிரதிகள் செய்யப்பட்டு வெவ்வேறு மூன்று கோவைகள் மூலம் சமர்பிக்கப்படல் வேண்டும்.