படிவம் K -35 A ல் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்
மூல விண்ணப்படிவம் நிகராக பூர்த்திசெய்யப்பட்டு இங்கு கீழ் சொல்லப்படும் சகல ஆவணங்களின் பிரதிகளும் இணைக்கப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட மூல விண்ணப்பபடிவமானது ஆவணங்கள் சகிதம் மேலதிக பிரதயொன்று எடுக்கப்பட்டு இரண்டு தொகுதிகளாக (Two Sets) சமர்ப்பிப்பட வேண்டும்
அவசர கடவுச்சீட்டு தேவைப்படுமாயின் 03 தொகுதிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (ஒரு வருடத்துக்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு மட்டும்)
4.5 செ. மீ உயரமும் 3.5 செ. மீ அகலமும் கொண்ட மிக தெளிவான 04 புகைப்பட பிரதிகள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். புகைப்படமானது கடைசி 03 மாதங்களுக்குள் பெறப்பட்டிருத்தல் வேண்டுமென்பதுடன் காதுகள் தெளிவாக தெரிகின்ற, இருளற்ற , நேர் பார்வை உடைய நிழல்களற்ற, மூக்கு கண்ணாடி அணியாப, தொகுப்பு செய்யப்படாத, மற்றும் புகைப்படத்தின் பின்னமைந்த வர்ணம் அணிந்திருக்கும் உடையின் வர்ணத்திலும் வேறுபட்டிருத்தல் வேண்டும்.
ஆவணங்கள் யாவும் A4 அளவுகொண்ட கடதாசி தாளில் மட்டுமே பிரதி செய்யப்பட்டு சமாப்பிக்கப்படல் வேண்டும். மூல ஆவணங்கள் யாவும் (Original Documents) தனியாக சமாப்பிக்கப்படல் வேண்டும்(மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட பிரதி மூலப் பிரதி ஏற்கப்படமாட்டாத)