பொலிஸ் இசைவு அறிக்கையை பெற அதற்கான விண்ணப்பத்தை ஒழுங்காக பூா்த்தி செய்து இரண்டு பிரதிகள் சகிதம் சமா்ப்பித்தல் வேண்டும். இவ்விரண்டு விண்ணப்ப பத்திரங்களுடனும் பின்வரும் ஆவணங்களின் பிரதிகள் இணைக்கப்பட்டு அவற்றின் மூலப்பிரதிகள் சகிதம் சமா்ப்பித்தல் வேண்டும்.
விண்ணப்பத்தில் இத்தாலி நாட்டின் வதிவு விலாசத்துடன் தொடா்புகொள்ள கூடிய தொலைபேசி எண் குறிப்பிடப்பட வேண்டுமென்பதுடன், கடைசியாக இலங்கையிலிருந்து வெளியேறிய திகதியும் குறிப்பிடப்பட வேண்டும்