தமிழில், சிங்களத்தில் /ஆங்கிலத்தில் உள்ள மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டிய ஆவணங்களின் மூலப்பிரதி இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், கொன்சுயுலர் பிரிவினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு ​மேற்பட்டிருத்தலாகாது

மூலப்பிரதி தமிழில்/சிங்களத்தில் காணப்படுமாயின் அவற்றின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின்,கொன்சுயுலர் பிரிவினால் அத்தாட்சிப்-படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கு ​மேற்பட்டிருத்தலாகாது

மொழிபெயர்ப்பு தேவைக்கான விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட்டு ​ தமிழில் ,சிங்களத்தில் ,ஆங்கிலத்தில் உள்ள மூலப்பிரதி / ஆங்கில மொழி பெயர்ப்பு என்பன நிழற்பட பிரதி சகிதம் சமர்ப்பிப்படவேண்டும்

மொழிபெயர்ப்பு தேவை இத்தாலியில் வழங்கப்பட்ட ஆவணங்களாக இருக்குமிடத்து, அவை (PREFECTTURA)/ (PROCURA) என்பவற்றில் சான்றுபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும்

விண்ணப்பதாரியின் பின்ரும் ஆவணங்களின் நிழற்பட பிரதிகள் அவற்றின் மூலப்பிரதி சகிதம் சமர்ப்பிக்கப்படவேண்டும்

  1. கடவுச்சீட்டு
  2. இத்தாலியில் தங்கி இருப்பதற்கான அனுமதி பத்திரம் (Soggiorno)

(மூலப்பிரதிகள் யாவும் பரீட்சிக்கப்பட்ட பின் மீண்டும் ஒப்டைக்கப்படும்)